
செய்திகள் சிந்தனைகள்
சோதனைதான் ஊக்கம் அளிக்கின்ற டானிக்..! - வெள்ளிச் சிந்தனை
‘உலகத்தில் இருக்கின்ற சமுதாயங்கள் அனைத்துமே சிரமங்களும் சோதனைகளும் நிறைந்த காலகட்டத்தை கடக்கத்தான் செய்கின்றன. செழித்தோங்கி நிலைத்துநிற்கின்ற திறனையும் ஆற்றலையும் அவை எந்த அளவுக்குப் பெற்றிருக்கின்றன என்பதை உணர்த்துகின்ற உரைகல்லாகத்தான் அவை பாதையில் எதிர்கொள்கின்ற முட்டுக்கட்டைகளும், சமகாலத்திய சோதனைகளும் இருக்கின்றன.
அவர்களின் இறைவன் அவர்களுக்கு அளித்த ஆற்றல்களும் அவர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற திறமைகளும் புத்துயிரும் புத்துணர்வும் பெறுவதற்கு அந்தக் கஷ்டங்களும் இழப்புகளும்தாம் உதவுகின்றன.
சமூகங்களின் வாழ்வில் சிக்கல்களும் சிரமங்களும்தாம் ‘புத்துயிரும் புதுத்தெம்பும் அளிக்கின்ற அமிர்தத்தின்’ தகுதிநிலையைப் பெற்றிருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் முந்திக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு உந்துசக்தியாய் இருப்பதும் அவைதாம்.
சோதனைகளுக்கும் சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தப்படாத சமூகங்களிடம் நிலைமையைத் திருத்துகின்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதில்லை. தம் மீதான நம்பிக்கையையும் அவை காலப்போக்கில் இழந்துவிடுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் நாள் செல்ல நாள் செல்ல சொகுசான வாழ்க்கைக்கு அடிமையாகிவிடுகின்றார்கள்.
தங்களின் உண்மையான தகுதிநிலையை மறந்துவிடுகின்றார்கள். தேக்கநிலைக்கு ஆளாகி முடங்கிப் போகின்றார்கள். பிறகு வரலாற்றின் ஏடுகளிலிருந்து காணாமல் கரைந்து போகின்றார்கள்’
- மெலானா அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am