நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வயநாடா - ரேபரேலியா எதை ராஜிநாமா செய்வது?: குழப்பத்தில் ராகுல்

மலப்புரம்:

வயநாடு, ரேபரேலி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் எதை ராஜிநாமா செய்வது என்று குழப்பத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளார்.

கேரளத்தில் வயநாடு தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில்,  நான் வயநாடு எம்.பி.யாக தொடர்வதா அல்லது ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா என்பதில் முடிவு எடுப்பதில் எனக்கு குழப்பம் உள்ளது.

நான் எடுக்கும் முடிவு இரு தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று மட்டும் என்னால் இப்போது உறுதியளிக்க முடியும்.

கடவுள் தன்னிடம் கூறியபடி நடப்பதாகவும், தான் இறைவனால் அனுப்பப்பட்டவன் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

ஒரு பிரதமராக எவ்வாறு நடக்க வேண்டும் என்று கடவுள் அவருக்கு கூறவில்லை எனத் தெரிகிறது.  

பெரிய விமான நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்களை அதானியிடம் கொடுத்துவிடுமாறு கடவுள் கூறினாரா என்றும் தெரியவில்லை என்று மோடியை விமர்சித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset