
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானப் பயணிகள் சென்னையில் தவிப்பு
சென்னை:
தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் தவித்தனர். சென்னை – சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 1.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் விமானத்தில் ஏற 186 பயணிகள் தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக காத்து இருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இன்று காலையில் சரி செய்யப்பட்ட பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm