நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள திருமங்கை ஆழ்வார் சிலை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது

சென்னை:

தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிகமான பழங்கால பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் தமிழக கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 செ.மீ. உயரம் கொண்ட திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை  இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்தச் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது பல்கலைக்கழக அறக்கட்டளை மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

இந்த மன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த வெண்கல சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset