நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் சுற்றித் திரிந்த பூனையின் காணொளி பதிவு வைரலானது

லாஸ் ஏஞ்சல்ஸ்:

பறக்கும் விமானத்திற்குள் பூனை சுற்றித் திரிந்த காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து டென்னிசியின் நாஷ்வில்லி பகுதிக்கு இயக்கப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 

ஜேசன் பிட்ஸ் என்பவரின் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு பூனை விமானத்திற்குள் சுற்றி திரிவதைக் காட்டுகிறது.

விமான பணிப்பெண்கள் அதனைக் கவனிக்கவில்லை.

விமானத்திலிருந்த ஒருவரின் பையிலிருந்து அது வெளியேறியது.

பயணிகள் எல்லோரும் அந்தப் பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் எனப் ஜேசன் பிட்ஸ் பதிவிட்டிருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset