செய்திகள் கலைகள்
ஷங்கரின் இந்தியன் திரைப்படம் ரீ ரிலீஸ்: மலேசியாவில் FST OFFICIAL வெளியீடு செய்தது
கோலாலம்பூர்:
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் படம் 1996ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் FST OFFICIAL அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது.
ஊழலுக்கு எதிராக இந்தியன் தாத்தாவின் அதிரடியான ஆக்ஷன் படத்தின் பலம் என்றே சொல்லலாம். இந்தியன் 2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதன் முதல் பாகம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த இந்தியன் படத்தில் கமல்ஹாசன், ஊர்மிலா, மனிஷா கொய்ரலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, நிழல்கள் ரவி, அஜய் ரத்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.
முன்னதாக, இந்தியன் படத்தின் சிறப்பு காட்சி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள LFS PJ STATE திரையரங்கில் நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சியில் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து இந்தியன் படத்தைக் கண்டு ரசித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 10:41 pm
காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: முதல்வர் ரேவந்த் ரெட்டி
December 19, 2024, 10:07 pm
அழகு ராணி போட்டிகளில் நடக்கும் மோசடித்தனங்கள்: அம்பலப்படுத்தினார் நந்தினி
December 19, 2024, 3:34 pm
ஆஸ்கர் போட்டியிலிருந்து லாபதா லேடீஸ் நீக்கம்
December 18, 2024, 2:57 pm
2025ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் முன்னணி தமிழ்த்திரைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்
December 18, 2024, 12:31 pm
சோழன் திரைப்பட விழா 2024 எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது
December 16, 2024, 10:38 am
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
December 15, 2024, 9:32 pm
புஷ்பா 2 திரைப்படத்தின் 10-ஆவது நாள் வசூல் ரூ. 1292 கோடியை எட்டியது
December 13, 2024, 4:26 pm
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல்துறையினர் அதிரடி
December 11, 2024, 10:31 am
NO கடவுளே அஜித்தே PLEASE !!!: அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித்குமார்
December 11, 2024, 10:01 am