நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை முதன்மைப்படுத்துகிறது: பொருளாதார நிபுணர்கள், வர்த்தகர்கள் கருத்து 

கோலாலம்பூர்:

கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை முதன்மைப்படுத்துகிறது என்று மலேசிய வர்த்தகர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துரைத்துள்ளனர்.

அல்லாஹ் காலுறை விவகாரத்தில் சிக்கிய கேகே மார்ட்டை புறக்கணிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மல் சாலே வலியுறுத்தி வந்தார்.

இதன் அடிப்படையில் கேகே மார்ட் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தில் கேகே மார்ட் நிறுவனர் டத்தோஶ்ரீ  சாய் கீ கானையும் பிரதமர் இணைத்துக் கொண்டார்.

பிரதமரின் இந்த முடிவு நாட்டின் உறுதியான வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் பிரிவினை உணர்வுகளை தவிர்த்து தேசிய வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தில் பிரதமரின் கவனத்தை பிரதிபலிக்கிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கருதும் அக்மல் சலேவின் புறக்கணிப்பு அழைப்புக்கு நேரடியாகப் பதிலளிப்பதற்குப் பதிலாக, 

அன்வார் சட்ட, நீதித்துறை செயல்முறைகள் எந்தவொரு எதிர்விளைவுகளையும் நிவர்த்தி செய்ய அனுமதித்தார்.

இது மலாய்,  முஸ்லீம் சமூகங்களுக்குள் பதட்டங்களை அதிகரிக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதற்கும் அவரது உறுதிப்பாட்டை காட்டுகிறது.

தற்போது உஸ்பெகிஸ்தானில் தனது வர்த்தகத்தை விரவாக்கம் செய்ய கேகே மார்ட்டிற்கு வழிகளையும் பிரதமர் அமைத்துள்ளார்.

இது நாட்டின் பொருளாதாரத்தின் மேம்பாட்டிற்கு வித்திடும்.

இப்படி சர்ச்சையான விவகாரங்களுக்கு சுமூகமான தீர்வுகளை கண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பிரதமரின் நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது வணிக நிறுவன அதிபர்களும் பொருளாதார வல்லுனர்களும் கருத்துரைத்துள்ளனர்.  

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset