செய்திகள் கலைகள்
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகர் ஃபஹத் ஃபாசில்?: அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கொச்சின்:
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஃபாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக் வந்தவர் தான் ஃபஹத் ஃபாசில்.
மலையாளம் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் கடந்த ஆண்டு இவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி படு வெற்றியை கண்டார்.
ரஜினியுடன் வேட்டையன், மாரீசன் போன்ற படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் படு ஹிட்டடித்த புஷ்பா 2 திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஃபஹத் ஃபாசில் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவரிடம் ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மருத்துவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்றிருக்கிறார்.
பின்னர் 41 வயதுள்ளவருக்கு ADHD இருந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியுமா என ஃபஹத் ஃபாசில் கேட்டதன் மூலம் அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
Adhd என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு, இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்களாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
