நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உயர்தர உறைந்த உணவுகளின் சகாப்தமான மஹா பெர்ஜெயா சபாவில் கிளை விரித்துள்ளது

கோத்தா கினபாலு:

தலைநகர், சிலங்கூர் மாநிலங்களில் உயர் தரமான உறைந்த உணவுகளின் சகாப்தமான மஹா பெர்ஜெயா தற்போது தனது துணை நிறுவனத்தின் மூலம் சபாவில் கிளை விரித்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மஹா பெர்ஜெயா நிறுவனம் உயர்தர உறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை விநியோகம் செய்து வருகிறது.

உயர் தர இறைச்சிகளை வழங்குவதன் மூலம் மக்களின் நம்பகமான நிறுவனமாக மஹா பெர்ஜாயா விளங்கி வருகிறது.

குறிப்பாக மஹா பெர்ஜாயாவின் அனைத்து உணவுப் பொருட்களும் ஹலால், ஏபி சான்றிதழ் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

May be an image of 5 people, turnstile, launderette, hospital and text

இந்நிலையில் மஹா பெர்ஜாயா தனது துணை நிறுவனத்தை கோத்தாகினபாலுவில் திறந்துள்ளது.

இதன் மூலம் தனது வணிகத்தை சபா மாநிலத்திற்கு மஹாபெர்ஜெயா விரிவாக்கம் செய்துள்ளது.

பிடிசி குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ஹாஜி அப்துல் காதிர் பி. எம்இ சிக்கந்தர் இத்துணை நிறுவனத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.

மஹா பெர்ஜாயாவின் தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை சபா சந்தைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் எங்கள் நிறுவனத்தின் தரம், உணவு பாதுகாப்பிற்கான சேவையை நாங்கள் மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறோம் என்று மஹா பெர்ஜாயாவின் வணிக மேம்பாட்டு இயக்குநர் மாஹ்ஃபுஸ் கவாரிஸ்மி கூறினார்.

May be an image of 13 people, carpet and text

மேலும் சபா மாநில வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கிவதே எங்களின் இலக்கு என்று அவர் மேலும் கூறினார்.

மஹா பெர்ஜயா உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இருந்து ஆண்டுக்கு 20,000 மெட்ரிக் டன் அளவுக்கு 952 தயாரிப்புகளை இறக்குமதி செய்கிறது.

உயர்தர இறைச்சி, பால் பொருட்களை மஹா பெர்ஜெயா வாடிக்கையாளர்களுக்கு வழங்கிறது.

இது சபா மாநில வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக மஹா பெர்ஜாயா விளங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சபாவில் மஹா பெர்ஜாயா நிறுவனம் Bigwheel Industrial, Jalan Tuaran, Kota Kinabalu, Sabah எனும் முகவரியில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் என்று மாஹ்ஃபுஸ் கூறினார்.

மேல்விவரங்களுக்கு www.mahaberjaya.com.my அல்லது

மாஹ்ஃபுஸ் வாட்சாப் எண் +60 17-645 3278, mahfuz@mahaberjaya.com.my மின்னஞ்சல் அனுப்பலாம்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset