செய்திகள் மலேசியா
கெடா சுங்கை செலுவாங் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் உடைபடும் சூழலை எதிர்நோக்கியுள்ளது
அலோர் ஸ்டார்:
கெடா சுங்கை செலுவாங் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் உடைபடும் சூழலை எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தினர் அனைவரும் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கெடா மாநில அரசாங்கம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் இருமுறை நோட்டீஸ் பெற்றுள்ளது.
SIME DARBY மேற்பார்வையில் இந்த நிலம் KTPC யிடம் விற்கப்பட்டு விட்டது.இதனால் சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து உடனடியாக ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூலிம் தொழிற்துறை பூங்கா தரப்பு அவசரம் காட்டி வருகின்றனர்.
இவ்வாலயம் 1953ஆம் ஆண்டு தோட்டப்பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். இதனை முனொரு காலத்தில் SIME DARBY நிறுவனம் வழிநடத்தி வந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநில அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. காரணம், இந்த நிலம் தற்போது SIME DARBY நிறுவனத்தின் வசமாக இல்லை என்று கிஷோர் குறிப்பிட்டார்.
இப்பொழுது அமைந்துள்ள ஆலயத்திலிருந்து ஏறக்குறைய 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லாடாங் விக்டோரியா அருகாமையில் செம்பனை தோட்டத்திற்குள் நிலத்தை மாநில அரசு நிர்வாகத்தினர் வழங்கினர் .அவர்கள் வழங்கிய நிலத்தை ஏற்கொள்ள முடியாது என்று ஆலய தரப்பினர் தெரிவித்தனர்.
ஏன்னென்றால் அவ்விடத்தில் குறைந்தது 5க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அதுடன் இப்பொழுது அமைந்துள்ள சுங்கை செலுவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலத்தை சுற்றி 10 குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தது 2000 த்திற்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் உள்ளன.
அக்குடும்பங்களுங்கள் வழிப்பாடுத் தளமாக இவ்வாலயம் உள்ளது . அதே சமயத்தில் ஆலயம் நிர்வாகம் லுனாஸ் வட்டாரத்திலுள்ள ஓர் இடத்தை கேட்டோம் .
அவ்விடத்தில் வேறொரு மேம்பாட்டுத் திட்டம் வர உள்ளத்தாக தெரிவத்தன ஆனால் பல ஆண்டுக் காலமாக அந்நிலம் காலியாகவேத்தான் உள்ளது என்பதுத்தான் உண்மை .
ஆகவே , சுங்கை செலுவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் கூலிம் ஹய் தேக் பாக் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒரு போதும் தடையாக இல்லை ஆனால் தங்களுக்கு இவ்வாலயம் பாதுக்காக்கப்பட வேண்டும் . அதற்கு இவ்வாலயம் இப்பொழுது இருக்கும் இடத்திலே இருப்பத்தற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கிஷோர் குமார் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, ஆலயம் சட்டவிரோதமாக இருப்பதாக நிகழ்கால தரவுகள் காட்டுவதாக மாநில சீன, இந்தியர் சயாம் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் சியா சென் கூறினார்.
அதனால் மாநில அரசாங்கம் ஆலய நிர்வாகத்திற்கு மாற்று நிலம் வழங்குவதோடு உதவவும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார். ஆலய விவகாரம் தொடர்பாக KULIM HI-TECH PARK COORPERATION, கூலிம் மாவட்ட அதிகாரிகளுடன் கோயில் தரப்பு சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2024, 1:44 pm
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 31, 2024, 1:29 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
October 31, 2024, 9:40 am
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 31, 2024, 12:40 am
தீபாவளி பண்டிகை 2024: பேரரசர் தம்பதியர் வாழ்த்து
October 30, 2024, 1:57 pm
தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர்
October 30, 2024, 1:23 pm
தீபத் திருநாள் இந்திய சமுதாயத்திற்கு மேலும் பல உருமாற்றங்களை கொண்டு வர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 30, 2024, 11:44 am
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
October 30, 2024, 11:41 am
தீபாவளி முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது
October 30, 2024, 10:04 am