செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சவால்களுக்கு மத்தியில் மொழி, இன மேம்பாட்டுக்காக சேவையாற்றுகின்றனர்: டத்தோ நெல்சன்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தில் குரு என அழைக்கப்படும் ஆசிரியருக்கு பெரும் கௌரவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழியே தமிழில் உருவானது.
பெற்றோர்களுக்கு அடுத்து, தெய்வத்தை விட, நாம் அதிகம் முக்கியத்துவம் தர வேண்டியது நமது ஆசிரியர்களுக்குத்தான்.
கல்வியும், வித்தையும் சொல்லித் தரும் குருவுக்கு, தவறாமல் காணிக்கை வழங்கும் பழக்கமும் நம் சமூகத்தில் ஆதிகாலம் தொட்டு நிலவி வந்திருக்கிறது.
இன்று பலரும் பல தொழில்களைப் பார்த்தாலும், பல வேலைகளைச் செய்தாலும், ஆசிரியர் பணி என்பது மட்டும் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமான தியாகத்தையும், அர்ப்பண உணர்வையும் ஒருவர் வழங்கும் துறையாகும்.
யார் வாழ்க்கையில் முன்னேறினாலும், கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஒரு மனிதனுக்கு பொறாமை குணம் ஏற்படுவது இயல்பு.
ஆனால், ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அவனைப் பார்த்து பொறாமைப் படாமல் பெருமிதமும், பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ளும் மனம் ஆசிரியர் ஒருவருக்கே உரியது.
நம்மில் யாரும் உயர்ந்த பதவிகளை அடைந்தாலோ, செல்வச் செழிப்பை அடைந்தாலோ, நாம் நாடிச் சென்று நன்றி கூறுவது ஆசிரியருக்குத்தான்
இவ்வாறு பல வகைகளிலும் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும், நம் அறிவைக் கூர்மையாக்கி மெருகேற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கு நன்றி கூறும் நாளாக – அவர்களின் தியாகப் பணிகளை நினைவுபடுத்தும், கௌரவப்படுத்தும் நாளாக மலரும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்து கூறுவதிலும் நன்றி தெரிவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் நமது இந்திய ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளின் சூழல், புறநகர் பகுதிகளில் பள்ளிகள் அமைந்திருப்பது, மாணவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள், அவர்களின் ஏழ்மை – போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தன்னலம் பாராமல் அர்ப்பண உணர்வுடன் நமது மொழி, இன மேம்பாட்டுக்காக சேவையாற்றி வருகின்றனர்
வர்களுக்காக என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2024, 6:11 pm
தெங்கு மக்கோத்தா பகாங்கை திருமணம் செய்யப்போவதாக கூறிய பெண்ணை போலிசார் கண்காணித்து வருகின்றனர்
December 13, 2024, 4:53 pm
நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் பாப்பாகோமோ கைது
December 13, 2024, 4:52 pm
அனைத்துலக முவாதாய் போட்டியில் வெற்றி பெற்ற மலேசியர்களை மஇகா விளையாட்டு பிரிவு கௌரவித்தது
December 13, 2024, 4:51 pm
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன
December 13, 2024, 4:49 pm
இந்தோனேசிய பெண்ணை கடத்திய குற்றச்சாட்டை வட்டி முதலை கும்பலைச் சேர்ந்த நால்வர் மறுத்தனர்
December 13, 2024, 4:30 pm
தெங்கு ஜஃப்ருல் பிகேஆரில் இணைந்தரா? மெகட் ஜுல்கர்னைன் மறுப்பு
December 13, 2024, 4:04 pm
மலேசியாவில் நடுத்தர மக்களின் ஊதியம் உயர்ந்துள்ளது: ரஃபிசி ரம்லி
December 13, 2024, 3:55 pm