நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம் வாக்காளர்களின் பர்தாவை அகற்றி சோதனையிட்ட பாஜக வேட்பாளர் மீது வழக்கு

ஹைதராபாத்:

ஹைதராபாதில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் பர்தாவை அகற்றி, முகத்தைக் காண்பிக்குமாறு சோதனையிட்ட அத்தொகுதி பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிராரத்தின்போது மாதவி லதா பள்ளிவாசலை நோக்கி அம்பு எய்வதுபோல் சைகை காட்டியது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி, அத்தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்தார்.

தேர்தல் விதிமீறிய அவரது செயலால் லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதவி லதாவை எதிர்த்து மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset