நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி: மே 18ல் நடைபெறும்

மஞ்சோங்:

பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி வரும் மே 18 ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம், டிஐஏ கிக்கர்ஸ் இயக்கமும் இணைந்து இப்போட்டியை நடத்துவதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்  ஜி. மகாலிங்கம்  கூறினார்.

இந்த மாவட்டத்தில்  உள்ள 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ள அதில் இருந்து மாணவர்கள் பங்கேற்க உள்ளன.

இப்போட்டி டிஐஏ சங்கம் திடலில் நடைபெறவிருப்பதாகவும் இதற்கு ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் கிண்ணம்  என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்ப்பள்ளி  மாணவர்களிடையே கால்பந்து ஆர்வத்தை ஊக்குவிக்க உதவும். மேலும் பள்ளி மட்டத்தில் கால்பந்து திறமைகளை வளர்க்க ஊக்குவிக்கிறது.

டிஐஏ உடற்பயிற்சி கூடம், கால்பந்து மைதானம் உள்ளிட்ட முழுமையான பயிற்சி வசதியைக் கொண்டுள்ளது, 

இது கால்பந்து பயிற்சி திட்டத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இது இளம் வீரர்களுக்கு தகுந்த, போதுமான சூழலில் தங்கள் திறமைகளை பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இது கால்பந்து பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும் மேலும் அதிகமான மாணவர்கள்  விளையாடுத் துறையில்  முயற்சிக்க வாய்ப்பளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  

திறன் மிக்க இளம் விளையாட்டாளர்களை  கண்டறியவும் இந்த திட்டம் உதவுகிறது என்றார் மகாலிங்கம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset