நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா

இஸ்தான்புல்:

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனி சுதந்திர நாடுகளாக செயல்பட இரு தேசத் தீர்வு எற்பட்டால் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா  தெரிவித்தார்.

பாலஸ்தீன பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீர்வு மட்டும்தான் ஒரே வழி என்று மலேசியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேல் தனி நாடாகவும், பாலஸ்தீனம் இன்னொரு தனி நாடாகவும் இரு தேசத் தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு முழு அரசியல் இயக்கமாகச் செயல்பட ஹமாஸ் அமைப்பு தயாராக இருக்கிறது.

மேற்குக் கரையையும் காசா முனையையும் உள்ளடக்கிய தனி நாடு, 1967-ஆம் தேதிக்கு முந்தைய எல்லைகளுடன் அமைக்கப்பட்டால் அதை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொள்ளும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset