நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் பிரச்சினைகளை ஒற்றுமை அரசு தான் தீர்க்கிறது தேசியக் கூட்டணி அல்ல: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோல குபு பாரு:

மக்கள் பிரச்சினைகளை ஒற்றுமை அரசு தான் தீர்க்கிறது. மாறாக தேசியக் கூட்டணி அல்ல.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் கோல குபு பாருவில் உள்ள இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

காரணம் ஒற்றுமை அரசாங்கம்தான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.

மேலும் தேசியக் கூட்டணி மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்காததால், அதன் வேட்பாளர் கைருல் அஸ்ஹாரி சவுத் வெற்றி பெற்றாலும், தேசியக் கூட்டணி சமூகத்திற்கு அதிகம் செய்ய முடியாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க, உங்களுக்கு அரசாங்கத்தின் வேட்பாளர் தேவை. 

எனவே வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை தேர்வு செய்தால் நல்லது.

இத் தேர்தலில் குறைந்தபட்சம் 80% இந்திய மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒற்றுமை அரசாங்கத்திற்கு வாய்ப்பு உள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சி இந்திய சமூகத்தின் 50% வாக்குகளைப் பெறும் என்று நம்பினால், 80 விழுக்காட்டு இந்திய வாக்குகளைப் பெற முடியும் என்று என்னால் தைரியமாகக் கூற முடியும்.

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ்க்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset