நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

25 ஆண்டுக்கால பிரச்சினைக்கு தீர்வுக் கண்டதன் மூலம் தோட்டப் பாட்டாளிகளின் நலனை மடானி அரசு பாதுகாத்துள்ளது: குணராஜ்

கோல குபு பாரு:

25 ஆண்டுக்கால பிரச்சினைக்கு தீர்வு கண்டதன் மூலம் தோட்டப் பாட்டாளிகளின் நலனை மடானி அரசு பாதுகாத்துள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் கட்சியின் தோட்ட தொழிலாளர் பிரிவின் தலைவருமான குணராஜ் கூறினார்.

மேரி தோட்டம், புக்கிட் திங்கி தோட்டம், நைகல் கார்ட்னர், புக்கிட் தாகார், மின்ஞாக் தோட்டம் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வீட்டுப் பிரச்சினைகாக போராடி வந்தனர்.

இந்நிலையில் 245 தோட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.

இலவசமாக தரை வீடுகள் 2 ஆண்டுகளில் கட்டித் தரப்படும் என்று வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று அறிவித்தார்.

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 1,250 குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இந்த அறிவிப்பு தோட்டப் பாட்டாளிகளின் நலனை பாதுகாப்பதை மத்திய மாநில, மாநில அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளன.

இந்த நாட்டில் தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியையும் உரிமைகளையும் நீதி தொடர்ந்து பாதுகாக்கும். 

ஒவ்வொரு சமூகத்தினரும் உரிமைகளுக்காகப் போராடுவது தான் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெற இந்த விவகாரம் நீதியின் முதுகெலும்பாக அமைகிறது.

மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் சுமூகமான முறையில் தீர்வு காணப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset