நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகச் சுதந்திரம் குறித்து ஆர்எஸ்ஃஎப்-வின் முன்மொழிவை அரசு கவனிக்கும்: ஃபஹ்மி ஃபட்சில் 

கோலாலம்பூர்:

உலக ஊடகச் சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவின் நிலையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் குறித்து எல்லைகளற்ற நிருபர்கள் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராயும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

மலேசியாவுடன் ஒத்துழைக்க சம்பந்தப்பட்ட சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் விருப்பத்தை அவர் வரவேற்பதாகவும் கூறினார்.

அவர்களின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்க வேண்டியதில்லை. ஆனால் மலேசியாவிற்கு எது பொருத்தமானது என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். 

உலக ஊடக சுதந்திரக் குறியீட்டு அறிக்கையின்படி ஊடகச் சுதந்திரத்தில் மலேசியா தற்போது 177-ஆம் தரவரிசையில் உள்ளது. 

கடந்தாண்டு மலேசிய ஊடகச் சுதந்திரத் தரவரிசையில் 73-ஆவது இடத்தில் இருந்த நிலையில் இவ்வாண்டு 34 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

இந்த அறிக்கையை வரவேற்பதாகவும், ஆனால் இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தின் அளவை நிர்ணயிப்பதில் இது உண்மையான அளவுகோல் அல்ல என்றும் கூறினார்.

உலக ஊடக சுதந்திர அறிக்கை தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, பல்வேறு அமைச்சகங்களின் கீழுள்ள மற்ற செயல்களையும் உள்ளடக்கியது என்று ஃபஹ்மி கூறினார்.

மேலும், மலேசியாவின் நிலைப்பாட்டை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசிய பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானின் அறிக்கையையும் ஃபஹ்மி விமர்சித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset