நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க நஜீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது: எம்ஏசிசி அதிகாரி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் உட்பட அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டபோது ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

நஜீப் ரசாக்கின் 1எம்டிபி வழக்கின் விசாரணை அதிகாரி நூர் அய்டா அரிஃபின் உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

2018இல் நஜிப்பின் சாட்சியத்தை அதிகாரிகள் பதிவு செய்த போது, ​​1 எம்டிபி பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை அவரிடம் காட்டி விளக்குமாறு கேட்டனர்.

இந்த ஆவணத்தை அவரிடம் காட்டியபோது நாங்கள் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கவில்லை.

ஆவணத்தை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாங்கள் கேட்டோம். 

ஆனால் அவரிடம்  எந்த கேள்வியும் கேட்காமல், ஆவணத்தை அடையாளம் காணுமாறு எம்ஏசிசி மட்டும் கூறியதையும் அவர் மறுத்தார்.

நஜீப்பின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டபோது அவருக்கு எதிராக சாத்தியமான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி தெரிவித்ததா என்று வழக்கறிஞர் வான் அஸ்வான் அய்மான் வான் பக்ருதீனின் கேள்விக்கு பதிலளித்த அய்டா, அவர்கள் அவரிடம் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset