நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 அடி உயரம், 12 கிலோ எடைக் கொண்ட மரகத வேல்: பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஈப்போ:

பேரா மாநிலத்தில்  கடந்த மூன்று தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வரும் 12 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட இந்த  மரகத கல்லால் வடிவமைக்ககபட்ட வேல்  பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும்.   பச்சை நிறத்திலான  மரகத்கல் கொண்டு அந்த வேல் வடிவமைக்கப்பட்டது.

பல ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த  மரகத வேல் நடந்து முடிந்த தைப்பூச விழாவின் போது ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த மரகத வேலுக்கு சித்திரா பௌர்னமியை முன்னிட்டு பேரா தம்புனில் உள்ள தாமான் பெர்பாடுவான் ரியாவில் மரகத வேலுக்கு   சிறப்பு பூஜை ரீத்தா யோகா கலையியல் சங்கத்தின் தலைவர்  சரவணக் குமார் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

அந்த வழிபாட்டில் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டு மரகத வேலை நேரில் கண்டு் பூரித்தனர்.

விலை மதிப்பில்லா  இந்த மரகத  வேல் ரீத்தா யோகா கலையியல்  சங்க  அமைப்பின் வழி பராமரிக்கப்பட்டு வருவதாகவும், 

மரகத கல்லால் வடிவமைக்கப்பட்ட வேல்  மலேசியாவைத் தவிர்த்து உலகில் வேறு எங்கும் இல்லை என்று ஆய்வின் வழி தெரிவதாக அச்சங்கத்தின் துணைத் துணைத் தலைவர் டத்தோ தர்மையா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அது அதிக விலை மதிப்பை கொண்டுள்ளதால் முறையான பாதுகாப்பின் வழி பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்த மரகத வேலை தமிழகத்தில்  உள்ள ஆறு படை முருகன் ஆலயங்களுக்கு வழிபாடு செய்ய கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ் நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு அந்த அரசாங்கம் ஆதரவை வழங்க முன் வந்துள்ளது.

அதிக விலை உயர்ந்த அந்த மரகத  வேலை மலேசியாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு பாதுகாப்புடன் கொண்டுச் சென்று பாதுகாப்புடன் நமது நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நமது நாட்டு அரசாங்கத்துடனும்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எல்லாம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset