நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தரமற்ற கல்வியாளர்களைப் பல்கலைக்கழக நிர்வாக அழைத்திருக்க வேண்டிய அவசியமில்லை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய கல்வியாளரைப் பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு தரமற்ற கல்வியாளர் என்றும் தனித்துவமான சாதனைகளை மேற்கொண்டவராக தெரியவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ப்ரோ இஸ்ரேல் அல்லது இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு கொண்ட இந்த மாதிரியான கல்வியாளர்களை உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு பேச அழைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

ஸியோனிஸ் சிந்தாந்தத்தைப் பரப்புவதை முதன்மை நோக்கமாக கொண்ட அவர் மலேசியா ஒரு  பாதுகாப்பான  நாடாக இல்லை என்று குற்றஞ்சாட்டிய பேராசிரியர் ப்ரூஸ் கிள்ளீ க்கு எதிராக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு குறிப்பிட்டார். 

முன்னதாக, வெளிநாட்டு பேச்சாளர் அழைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மலாயாப் பல்கலைக்கழகம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 

இதனால் மலாயாப் பல்கலைக்கழகம் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset