நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு இடைத்தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல் போகலாம் 

ஷா ஆலாம்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல் போகலாம் என்று மூடா கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். 

இந்த முடிவானது மூடா கட்சியின் மத்திய செயலவை செயற்குழுவில் எடுக்கப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மூடா கட்சி போட்டியிடாதது குறித்த எந்தவொரு காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. எனினும், இந்த முடிவு அனைவராலும் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும், மூடா கட்சி நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் தமது ஆதரவினை வழங்காது. அத்துடன் எந்தவொரு கட்சியையும் மூடா ஆதரிக்க போவத்தில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார். 

மூடா கட்சி கடந்த ஆறு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. போட்டியிட்ட 19 சட்டமன்ற இடங்களிலும் மூடா கட்சி தோல்வியையே தழுவியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset