நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச  மொஹைதின் தகுதியற்றவர்: ஃபாஹ்மி

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி தலைவர்  டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அரசியல் விவகாரங்கள் உட்பட தேசியப் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட தகுதியற்றவர்.

கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவரும் அமைச்சருமான ஃபாஹ்மி ஃபாட்சில் இதனை கூறீனார்.

எம்ஏசிசியின் குற்றவியல் நம்பிக்கை மோசடி உட்பட பல குற்றங்களின் தொடர்பில் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் மருமகன் டத்தோஶ்ரீ  முகமத் அட்லான் பெர்ஹான் தேடப்பட்டு வருகிறார்.

ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் எம்ஏசிசி விசாரணைக்கு உதவ டான்ஶ்ரீ மொஹைதின் மறுத்து விட்டார்.

ஆகவே டான்ஶ்ரீ மொஹைதின் தேசியப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

கோல குபு பாரு, கெஅடிலான் குறித்து பேசுவதற்கு முன் மொஹைதின் அவரின் மருமகனை நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

சட்டத்தில் இருந்து தப்பியோடியவரை கண்டுப்பிடிக்க உதவி மொஹைதின் ஓர் உதாரணமாக விளங்க வேண்டும் என்று ஃபாஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset