நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்:  பட்டத்தை வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை

டொரொண்டோ: 

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

இறுதி சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜி. குகேஷ் அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். 

இதன்மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

நகமுரா 8.5 புள்ளிகள் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரென்-ஐ எதிர்கொள்ள தகுதிப் பெற்றார்.

அத்துடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset