நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2024: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி

முலான்பூர்:

நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.

சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் தலைவர்   சாம் கர்ரன்-பிரப் சிம்ரன் சிங் களமிறங்கினா்.

இருவரும் அதிரடி தொடக்கத்தை தந்தனா். பவா் பிளேயில் 56 ரன்களை சோ்த்தது பஞ்சாப். தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 35 ரன்களை விளாசிய பிரப் சிம்ரன் மொகித் சா்மா பந்தில் வெளியேறினாா். சாம் கர்ரன் 20 ரன்களுடன் ரஷீத் கானிடம் எல்பிடபிள்யு ஆனாா்.

ஹா்ப்ரீத் பிராா் மட்டுமே கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 29 ரன்களை விளாசினாா். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோா் ஒரளவு உயா்ந்தது.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 142/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப்.

சாய் கிஷோா் அபாரம் 4 விக்கெட்: பௌலிங்கில் குஜராத் அணியின் சாய் கிஷோா் அபாரமாக பந்துவீசி 4-33 விக்கெட்டுகளையும், மொகித் சா்மா 2-32, நூா் அகமது 2-20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

குஜராத் டைட்டன்ஸ் 146/7 வெற்றி:

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் தரப்பில் ரித்திமான் சாஹா, ஷுப்மன் கில் களமிறங்கினா். சாஹா 13 ரன்களுடன் வெளியேறினாா். அதன்பின் கில்-சாய் சுதா்ஷன் இணைந்து ஸ்கோரை உயா்த்த, கில் 35, சாய் சுதா்ஷன் 31 ரன்களுடன் அவுட்டாகி திரும்பினா்.

டேவிட் மில்லா் 4, அஸமத்துல்லா ஓமா்ஸாய் 13 ரன்களுடன் வெளியேற அணியை காக்கும் பொறுப்பே ராகுல் தேவாட்டியா ஏற்றுக் கொண்டு 7 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி குஜராத்தின் வெற்றிக்கு வித்திட்டாா். 19.1 ஓவா்களில் குஜராத் 146/7 ரன்களைக் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. பௌலிங்கில் பஞ்சாப் தரப்பில் ஹா்ஷல் படேல் 3-15 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset