நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் தலைவராக அன்பானந்தன் மீண்டும் தேர்வு: துணைத் தலைவரானார் ஏஎஸ்பி ராஜன்

செலயாங்:

மீபாவின் தலைவராக அன்பானந்தனும் துணைத் தலைவராக ஏசிபி ராஜனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் 18ஆவது பொதுப் பேரவை இன்று நடைபெற்றது.

பேரவைக்கு பின் 2024-2026ஆம் ஆண்டுக்கான புதியப் பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கே. அன்பானந்தன்,  டத்தோ பதி ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில் அன்பானந்தன் 45 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டத்தோ பதிக்கு 9 வாக்குகள் கிடைத்தன.

துணைத் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவியது. இதில் ஏ.எஸ்.பி. இராஜன்  42 வாக்குகள்  பெற்று வெற்றிப் பெற்றார். 

எதிர்த்து போட்டியிட்ட  பேராவைச் சேர்ந்த டத்தோ சலாம் 18 வாக்குகள் பெற்றார்.

மூன்று உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பினாங்கு இந்தியர் கால்பந்துச் சங்கத் தலைவர் ஸ்ரீசங்கர்  42  வாக்குகள், கோலாலம்பூரைச் சேர்ந்த டத்தோ வீரமணி 38 வாக்குகள், பினாங்கைச் சேர்ந்த ஜைலானி 40  வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றனர்.

ஏழு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

இதில் விஷ்வா 51 வாக்குகள், கமலேஸ்வரன் 46 வாக்குகள், அண்ணாதுரை 41 வாக்குகள், தர்மகுமரன் 41 வாக்குகள், வில்லியம்ஸ் 41 வாக்குகள், குணசேகரன் 39 வாக்குகள் சத்யாபாலன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

மீபாவின் தேர்தலை செல்வராஜா சுமுகமாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset