நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய நிர்வாகியா சினெடின் சிடான் ? 

லண்டன்: 

இங்கிலாந்து  நாட்டின் முன்னணி காற்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணியை சினெடின் சிடான் வழிநடத்தவிருப்பதாக ஆருடங்கள் வலுத்து வருகிறது. 

FC BAYERN MUNICH அணியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என்று நம்பப்படும் வேளையில் அவர் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் மீது ஆர்வம் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

51 வயதான சினெடின் சிடான் இதற்கு முன் ரியால் மெட்ரிட் அணியின் நிர்வாகியாக இருந்தார். அவ்வணியுடன் இணைந்து ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், மற்றும் லா லீகா பட்டங்களையும் சிடான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் அடைவுநிலை மோசமாக இருக்கும் நிலையில் கடந்த பத்து வருடங்களாக இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அவ்வணி வெல்லவில்லை. 

இறுதியாக, 2013ஆம் ஆண்டு மென்செஸ்டர் யுனைடெட் அணி இங்கிலாந்து பிரிமியர் கிண்ணத்தை வென்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset