நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சாலையில் ரமலான் தொழுகை: 200 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்கு

மீரட்:

உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகையின் போது சாலையில் தொழுகை நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மீரட் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் தொழுகை நடத்த வந்தபோது இடப் பற்றாக்குறை காரணத்தால் சாலையில் சிலர் தொழுகை மேற்கொண்டனர்.

இதை தடுத்தபோது போலீஸôருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் தொழுகை மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம்சாட்டப்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தில்லியில் சாலையில் தொழுகை நடத்தி இஸ்லாமியர் மீது போலீஸ்காரர் ஒருத்தர் ஷூ காலால் எட்டி மிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset