நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரசாரத்தில் கல்வீச்சு: ஜெகன்மோகன் ரெட்டி காயம்

விஜயவாடா:

விஜயவாடாவில் பிரசாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது  கல்வீசப்பட்டதில் காயமடைந்தார்.

விவேகானந்தா கல்வி மையம் அருகே பேருந்தில் நின்றபடி ஜெகன்மோகன்  சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் மீது கல்வீசப்பட்டது. அதில் அவரின் இடப்புறக் கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின் தேர்தல் பிரசாரத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்தார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

ஆர்யன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset