
செய்திகள் இந்தியா
'மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுதில்லி:
மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) வெளியிடப்பட்டுள்ளது.
புதுதில்லியில் அக்கட்சித் தலைமையகத்தில் பாஜகவின் தோ்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்வில் மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவா்கள் பலர் கலந்துகொண்டுள்ளனா்.
பிரதமர் மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:
’ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு,
பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல திட்டம்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்
பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்
2025-ஆம் ஆண்டு ’பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக்’ கடைபிடிக்கப்படும்
பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்
வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை
ஸ்டார்ட் அப்கள் ஊக்குவிக்கப்படும்
திருநங்கைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம்
உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm