நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக லண்டனுக்கான விமான வழியை மாஸ் மாற்றுகிறது: போர் மூளும் அபாயம்

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானிய வான்பரப்பைத் தவிர்ப்பதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூருக்கும் லண்டனுக்கும் இடையிலான தனது விமான வழியை மாற்றுகிறது.

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பல சர்வதேச விமான நிறுவனங்கள் தற்காலிகமாக விமான வழியை மாற்றியமைத்து வருகின்றன.

இதனால் ஈரானிய வான்வெளியை  தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக  கூறியது.

மாஸ் நிறுவனத்தை தவிர்த்து ஏர் இந்தியா, ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், ஜெர்மனி விமான நிறுவனமான லுஃப்தான்சா ஆகிய நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நாட்டின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா தற்போது ஈரானிய வான்வெளியை அதன் விமானங்களுக்கு பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஈரான் தூதரகத்தை தாக்கி அங்கிருந்த ஊழியர்களைக் கொன்றதால் இஸ்ரேலை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset