நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்

புத்ராஜெயா:

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்கள் போன்று பாலஸ்தீனியர்களும் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நேரத்தில்  வடக்கு காசாவில் உள்ள ஷாதி அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேலிய நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களை மலேசியா கடுமையாக கண்டிக்கிறது என்று விஸ்மா புத்ரா கூறியது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகளை மலேசியா தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும்.

இஸ்ரேலிய ஆட்சியின் இந்த மிருகத்தனமான நடவடிக்கை வெறுப்புணர்வைத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும் இது மனிதநேயம், அமைதி, இரக்கத்தின் கொள்கைகளான இந்தப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு எதிரானது.

இந்தத் தாக்குதல் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள், மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை சீர்குலைத்துள்ளது.

மேலும் இந்த மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கான இஸ்ரேலின் நோக்கங்கள் கேள்விக்குறியாகி உள்ளது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset