நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த உலக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

காசாவில் போரினால் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதையும், அழிக்கப்படுவதையும் தடுக்க உலக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை உட்பட பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்துத் தொலைபேசி உரையாடலில் துருக்கி அதிபர் ரெஜெப் தய்யீப் எர்டோகனிடம் இந்தக் குறித்து தாம் தெரிவித்ததாகப் பிரதமர் கூறினார். 

காசா மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை உடனடியாக நிறுத்த சர்வதேச சமூக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

பலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து உலக அரங்கில் அந்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த மலேசியா தொடர்ந்து உறுதியளிக்கும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறிப்பாக வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைத் தீவிரப்படுத்த துருக்கி அதிபர் நம்பிக்கை தெரிவித்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset