நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைருலின் மரணம் தொடர்பான விசாரணை பாரபட்சமற்றதாக இருக்கும்: காவல்துறை உத்தரவாதம் 

மலாக்கா:

டுரியான் துங்கால்,கங்சா-கேசாங் சாலையில் நேற்று அதிகாலை போலீஸ் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடுநிலையாக நடத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டால், யாரிடமும் சமரசம் செய்ய முடியாது என்று அலோர் காஜா மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 2.56 மணியளவில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட முகமது கைருல் பசாஹ்ரி, மலாக்கா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 21 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 12.37 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடர்பாக, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குக் காவல்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்துத் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விசாரணையில் பாரபட்சம் எதுவும் இல்லை என்றும் கூறினார். 

இந்தச் சாலை விபத்தின் போது பிரதான சாலையிலிருந்த பாதிக்கப்பட்டவரைக் காவல்துறை அதிகாரி வேண்டுமென்றே தாக்கியதாகக் கூறப்படுகின்றது. 

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41(1)ன் படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், RM20,000க்கு குறையாத அபராதமும் RM50,000க்கு மிகாமலும் விதிக்கப்படலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset