நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடுமையான வெப்பம்; கிளாந்தானில் 1000க்கும் அதிகமான பாம்புகளை ஏ.பி.எம் பிடித்தது

கோத்தா பாரு: 

நாட்டின் கிழக்கு கரை மாநிலங்களில் ஒன்றான கிளாந்தானில் கடுமையான வெப்பம் மூன்று நாட்களாக பதிவு செய்யப்படும் நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பொது தற்காப்பு படை பிடித்துள்ளது ஏ.பி.எம் தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 1037 பாம்புகளை கிளாந்தான் ஏ.பி.எம் பிடித்துள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி சூழல் காரணமாக பாம்புகள் தங்களின் பகுதிகளிலிருந்து வெளியே வர தொடங்கியுள்ளதாக அதன் இயக்குநர் முஹம்மத் அட்ஸார் கூறினார். 

கருநாக பாம்பு, மலைப்பாம்பு, ஆகிய பாம்பு வகைகளை ஏ.பி.எம் தற்காப்பு படை பிடித்தது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 991 பாம்புகளும் மார்ச்சில் 934 பாம்புகளும் பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார். 

பிடிப்பட்ட பாம்புகள் அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset