நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

400மீ. ஓட்டப் போட்டியில் சிங்கப்பூரின் சாந்தியை ஷெரின் சாம்சன் வீழ்த்தினார்

புளோரிடா:

400 மீட்டர் ஓட்டப் போட்டியின் சிங்கப்பூரின் வெரோனிகா சாந்தி பெரேராவை தேசிய வீராங்கனை ஷெரின் சாம்சன் வல்லபோய் வீழ்த்தினார்.

அமெரிக்காவின் புளோரிடா ரிலேயில்  400 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஹாங்சோ ஆசிய போட்டியில் 400 மீட்டரில்  வெண்கலப் பதக்கம் வென்ற ஷெரின் 52.29 வினாடிகளில் கடந்து இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதே வேளையில் வெரோனிகா சாந்தி பெரேரா 200 மீட்டர், 100 மீட்டர் போட்டிகளில் வெற்றி பெற்றார்.

ஆனால் 400 மீட்டர் போட்டியில் அவர் 5ஆவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் போட்டியை 53.67 வினாடிகளில் நிறைவு செய்தார்.

இப் போட்டியில் கனடாவை பிரதிநிதித்து களமிறங்கிய கைரா கான்ஸ்டன்டைன் (51.50), ஜோ ஷெரார் (51.64) ஆகியோர் முறையே தங்கம்,  வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset