நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின்  நிலைத்தன்மைக்கு இஸ்மாயில் சப்ரியை உதாரணமாகக் கொள்ளுங்கள்: பாஸ்

கோலாலம்பூர்:

நாடு நிலைத் தன்மையாக இருக்க முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரியை, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான அரசு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் யஹ்யா இதனை வலியுறுத்தினார்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கடந்த ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றார்.

அரசாங்கத்தை அமைதியாகவும், எதிர்ப்பை தடுப்பதுடன் குறைவான சர்ச்சைகளுடனும் மலேசியாவை ஆட்சி செய்த பெருமை  இஸ்மாயில் சப்ரிக்கு உள்ளது.

டான்ஶ்ரீ மொஹைதின் யாசினிடம் இருந்து பொறுப்பை பெற்ற அவர் எதிர்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றினார்.

இதனால் கோவிட்-19 உட்பட அனைத்து அறைகூவல்களில் இருந்தும் அவர் நாட்டை மீட்டெடுத்தார்.

குறிப்பாக நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகள் ஏதும் இல்லை.

இஸ்மாயில் சப்ரியின் பாணியை உதாரணமாக கொண்டு பிரதமர் அன்வார் தலைமையிலான அரசு செயல்பட வேண்டும் என்று அஹ்மத் யஹ்யா வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset