நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரட்சி மலேசியா இயக்கத்தின் முதலாளி திட்டம் கிள்ளானில் அறிமுகம் கண்டது

கிள்ளான்: 

திரு. உமாகாந்தன் தலைமையிலான இந்திய அரசு சாரா இயக்கமான புரட்சி மலேசியா சார்பில் முதலாளி திட்டம் கிள்ளானில் சிறப்பான முறையில் அறிமுகம் கண்டது. 

இந்திய சமூகத்தை வர்த்தக துறையில் மிளிர செய்யவும் வியாபாரம் தொடங்குவதற்கு முன் சந்திக்கக்கூடிய சட்ட சிக்கல்கள், வழிமுறைகளை விளக்கும் நிகழ்வாக இந்த முதலாளி திட்ட்டம் அமைந்திருந்தது. 

இந்திய சமூகத்தின் மத்தியில் பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் எவ்வாறு உயர வேண்டும் என்று பல்வேறான தகவல்களும் பகிரப்பட்டது. 

முதலாளி திட்டத்தின் அறிமுக விழாவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், மலேசிய நண்பன் நாளிதழின் உரிமையாளர் டத்தோ ஷாஃபி,  மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் புனிதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

வர்த்தகதுறையிலும் வியாபாரத்துறையிலும் மலேசிய இந்தியர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து பேச்சாளர் பலர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக்கொண்டனர். 

அதோடு, பெர்கேசோ, காப்புறுதி, இலவச சட்ட ஆலோசனை ஆகிய முகப்புகளும் இடம்பெற்றிருந்தது. பொதுமக்கள் அவர்களிடமிருந்து கருத்துகளையும் உரிய விளக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கிள்ளானில் உள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முதலாளி திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset