நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலகக் கிண்ணம், 2027 ஆசியக் கிண்ண தகுதி சுற்று மலேசியா மீண்டும் தோல்வி

கோலாலம்பூர்:

2026 உலகக் கிண்ணம், 2027 ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டிகளுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியா அணி மீண்டும் தோல்வி கண்டது.

புக்கிட் ஜலில் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் ஓமான் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் ஓமான் அணியிடம் தோல்வி கண்டனர்.

சொந்த அரங்கில் மலேசிய அணியின் இந்த தோல்வி ரசிகர்களுக்ககு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset