நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழன் அறவாரியத்தின் தமிழ் அமுது 1, 2024 விழா: டத்தோஸ்ரீ சரவணன் நிறைவு செய்து வைப்பார்

கோலாலம்பூர்:

தமிழ் அமுது 1, 2024 ஓர் இலக்கிய விழா. ஒரு விருது விழா.  

பழன் அறவாரியத்தின் ஆதரவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தலைமையேற்று இந்த இலக்கிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலக்கியம் பேசுவோரும் சரி, இலக்கிய உரைகளைக் கேட்போரும் சரி, இலக்கியத்தை ரசிப்போரும் சரி அனைவருக்குமே இது ஒரு மிகச்சிறந்த இலக்கிய விருந்தாக அமையும். 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின்  குறளுக்கு ஏற்ப சிறந்த இலக்கிய உரைகளைக் கேட்டு மகிழலாம். 

தமிழ்நாட்டுத் தன்முனைப்புப் பேச்சாளர் ஐ.பி.எஸ் கலியமூர்த்தியின் சிறப்புரை, புகழ் பெற்ற பேச்சாளர் பாண்டித்துரையின்  உரை, முன்னாள் காவல்துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகனின் இலக்கிய உரை என செவிக்கினிய உரைகளைக் கேட்டு மகிழலாம்.

சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பழன் அறவாரியத்தின் ஆலோசகருமான டான்ஸ்ரீ பழன் இந்த நிகழ்ச்சியைத் தலைமை உரையாற்றித் தொடக்கி வைப்பார். 

ஓர் இலக்கியவாதியாகவும், அரசியல்வாதியாகவும் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான மஇகாவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்  நிகழ்ச்சியை நிறைவு செய்து வைப்பார்.

இலக்கிய நிகழ்ச்சி என்பதால் வெறும் உரை மட்டுமல்ல பாடல் ஆடல் என நம் கலைகளோடு இணைந்த நிகழ்ச்சியாக இது அமையும். 

இந்த நிகழ்ச்சி இலவசமாகப் பொதுமக்களுக்காக, இலக்கிய ஆர்வலர்களுக்காக படைக்கப்படுகிறது. வருகின்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் இளைப்பாற இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் அவசியம் தேவை. 

ஆக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, சிலாங்கூரில் உள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்வது அவசியம். உங்கள் வருகையை உறுதி செய்ய நீங்கள் அழைக்க வேண்டிய எண் 0163197329, 0176719258.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset