நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

குஜராத்: 

ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

நரேந்திர மோடி அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், இஷான் கிஷன் களமிறங்கினர்.

இஷான் 0 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ரன்களிலும் ப்ரீவிஸ் 46 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 3-ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset