நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தவில்லை

பெட்டாலிங் ஜெயா: 

2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் அழைப்பை மலேசியா ஏற்காது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

செலவுகள் மற்றும் பிற தாக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களிலிருந்தும் இது குறித்து ஆய்வு செய்த பின்னரே அமைச்சரவை இந்த முடிவு எடுத்ததாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் இப்போட்டியை ஏற்று நடத்த 603 மில்லியன் வழங்கினாலும் அந்தத் தொகையானது இப்போட்டிகான முழு செலவுகளை ஈடுக்கட்ட முடியாது என்றும் ஹன்னா இயோ கூறினார்.

இந்த குறுகிய காலத்தில் பொருளாதார தாக்கத்தைஹ் தீர்மானிக்க முடியாது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது என்று ஹன்னா இயோ கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset