நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி 

சென்னை:

17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றது. 

இப்போட்டி இன்று தொடங்கி மே 26-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கின்றது.

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
 
சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சந்திக்கவுள்ளன. 

இவ்விரு அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset