நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுவிஸ் பொது பூப்பந்து: இரண்டாம் சுற்றுக்கு லீ ஷி ஜீயா முன்னேற்றம்

கோலாலம்பூர்: 

சுவிஸ் பொது பூப்பந்து ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றைத் தேசிய பூப்பந்து வீரர் லீ ஷி ஜீயா வெற்றியோடு தொடங்கியுள்ளார். 

முதல் சுற்றில் லீ ஷி ஜீயா உலகத் தரவரிசையில் 30-ஆம் நிலையில் இருக்கும் தைவானின் சூ லி யாங்கை எதிர்கொண்டார். 

இதில் 21-19, 21-12 என்ற கணக்கில் சூ லி யாங்கை வீழ்த்தி லீ ஷி ஜீயா வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். 

இரண்டாம் சுற்றில் உலகத் தரவரிசையில் 27-ஆம் நிலையில் இருக்கும் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பியை எதிர்கொள்ளவிருக்கின்றார். 

இரண்டாம் சுற்றில் ஒருவேளை லீ ஷி ஜீயா வெற்றி பெற்றால் அவர் காலிறுதியில் மர்றோரு இந்திய வீரரான லக்‌ஷயா சென்னைச் சந்திப்பார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset