நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; கேஸ் சிலிண்டர் ரூ. 500, பெட்ரோல் விலை ரூ. 75க்கு வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்படும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, கேஸ் சிலிண்டர் ரூ. 500, பெட்ரோல் விலை ரூ. 75க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Killed, 6 Injured After Petrol Pump Roof Collapses In Chennai

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்பட்டு, மக்களவைத் தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நிலையே தொடர ஆவணம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset