
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஹஜ் இல்லம் அமைய உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்த பேராசிரியர் ஜவாஹிருல்லா
சென்னை:
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை இன்று (6.3.2025) மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்
Dr MH ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் 3.3.2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல்ஆபிதீன்,
மமக மாநில அமைப்பு செயலாளர்கள்
மாயவரம் அமீன், வழக்கறிஞர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 1:20 pm
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 8, 2025, 4:00 pm