நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்: 100 இடங்களில் நேரலை 

சென்னை: 

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 

நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாளை வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழக பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset