
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டு எம்பிக்களை தரக்குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை:
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரீகமற்றவர்கள் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கண்ணிய குறைவாகப் பேசுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாஜகவினர் தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டையும் எந்த மனநிலையில் அணுகுகிறார்கள் என்பது அவரது பேச்சின் வாயிலாக வெளிப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற மாண்பு என்பது மருந்துக்குக் கூட இவர்களால் பேணப்படுவதில்லை.
அறிவுப்பூர்வமாகவும்சித்தாந்த ரீதியாகவும் பாராளுமன்றத்தில் திமுக கூட்டணி கட்சியினர் வைக்கும் வாதங்களுக்குப் பதில் அளிக்க இயலாமல் தரக்குறைவாக பாஜகவினர் நடந்துகொள்கின்றனர்.
இவர்களின் கண்ணியமற்ற போக்கை நாட்டு மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். தக்க சமயத்தில் சரியான பாடத்தை ஒன்றிய அரசுக்கு அவர்கள் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏமாற்றுவதோடு தமிழ்நாடு எம்பிக்களையும் தரக்குறைவாகப் பேசும் தர்மேந்திர பிரதானுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 1:51 am
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?: குடியரசுத் தலைவர...
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்ப...
May 11, 2025, 10:27 pm
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருத...
May 11, 2025, 8:08 pm
வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு...
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 10, 2025, 9:25 am
நெல்லை நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்”: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்க...
May 9, 2025, 10:45 pm