நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்

சென்னை:

திமுக நம் அனைவரையும் ஏமாற்றிவிட்டது. வரும் 2026 தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை மாற்றுவோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் இதனை  தெரிவித்துள்ளார்.

எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு வந்து மகளிர் தினம். தமிழகம் முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்.

பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்த பாதுகாப்பும் இல்லாத போது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே என்று நீங்க நினைக்கின்றது எனக்கு புரிகிறது. என்ன செய்வது?

நீங்கள், நான் அனைவரும் சேர்ந்து தான் தி.மு.க., அரசை தேர்ந்தெடுத்தோம்; ஆனால் அவங்க இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே தெரிகிறது; எல்லாமே மாறக்கூடியது தானே, மாற்றத்திற்கு உரியது தானே?

2026ல் நீங்கள் எல்லாம் சேர்ந்து, நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவங்களை (தி.மு.க.,) மாற்றுவோம்.

அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லாரும் சேர்ந்து உறுதி ஏற்போம். ஒன்றும் மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய மகனா, தம்பியா, தோழனாக உங்களுடன் நிற்பேன்.

நன்றி வணக்கம் என்று விஜய் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset