செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்க்கல்விகென சிறப்பு செயலகம்: பாப்பாராயுடு
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்க்கல்விகென ஒரு சிறப்பு செயலகம் ஒன்றை அமைக்க ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பராயிடு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பள்ளி நனிமேம்பாட்டு நடுவத் தலைவர் அருண் துரைசாமி தலைமையில் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவையின் துணைத் தலைவர் குமரன் மாரிமுத்து, மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைச் செயலர் டாக்டர் குமரன் வேலு, பந்திங் ராஜா ஆகியோருடன் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பராயுடுவைச் சந்தித்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பலவேறு சிக்கல்களுக்குத் குறிப்பாக பள்ளிகள் இடமாற்றம், நிலப்பிரச்சனை, கணினி வகுப்புக்கள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் ஆசியுடன் இந்திய சமூகத்தின் அரசியல் சாரா இயக்கங்களின் முக்கிய நிகராளிகளைக் கொண்ட ஒரு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் .
மேலும் தமிழ்க்கல்வி மாநாடு ஒன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு நடத்தப்பட வேண்டும்,
அதில் தமிழ்க்கல்வி எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வும் , திட்டங்கள், தரவுகள், அடைவுக்கியீடுகள், மாணவர் நலன் குறித்து ஆய்வுக் கட்டுரைகளும் பரிந்துரைகளும் இடம்பெற வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாப்பாராயுடு அதுகுறித்து ஆராயப்படும் என்று கருத்து தெரிவித்தார்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதையும் மாணவர்கள் கற்பதற்கு புதிய கணினிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 6:35 pm
புதிய கடப்பிதழும், அடையாள அட்டையின் முகப்புகளும் போலியானது: உள்துறை அமைச்சகம் விளக்கம்
January 13, 2026, 5:06 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: மூன்று ஆண்கள் உயிரிழப்பு
January 13, 2026, 4:51 pm
‘RON95’ எரிபொருள் மோசடி: சிங்கப்பூரர் கைது
January 13, 2026, 3:49 pm
போதைப்பொருள் கும்பலின் எச்சரிக்கை: புவேர்ட்டோ லோபஸில் ஐந்து தலைகள் வெட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்
January 13, 2026, 3:32 pm
குளியலறையில் மறைக்கப்பட்ட கைப்பேசி: மாற்றுத் தந்தையின் அருவருப்பான செயல் வெளிச்சம்
January 13, 2026, 2:08 pm
லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்
January 13, 2026, 1:33 pm
சரவாக்கை முன்மாதிரியாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்: டத்தோ முருகையா
January 13, 2026, 11:54 am
