நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த பெரிய தொகை செலவிடத் தேவையில்லை: நஜிபுடின் நஜிப்

பெட்டாலிங் ஜெயா:

மலேசியா சரியான திட்டமிடலைப் பின்பற்றினால் 2026-ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைக் குறிப்பிட்டத் தொகையில் ஏற்று நடத்த முடியும் என்று மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் பொது செயலாளர் டத்தோ நஜிபுடின் நஜிப் தெரிவித்தார்.

மலேசியா சிங்கப்பூருடன் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவது குறித்து ஆலோசிக்கலாம். 

மேலும், காமன்வெல்த் விளையாட்டுகளில் எண்ணிக்கையைக் குறைக்கலாம். 

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் 600 மில்லியனில் சரியான திட்டமிடலுடன் ஏற்று நடத்த முடியும். கூடுதல் செலவைப் பற்றி மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினார். 

ஹோட்டல்களின் புதிய உள்கட்டமைப்பைக் கட்டுவதற்குப் பதிலாக 2017-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிகள் போது பயன்படுத்திய வசதிகளைப் புதுப்பிப்போம் என்றார் அவர்.

விளையாட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து 13-15 விளையாட்டுகளை ஏற்று நடத்தலாம். 

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முடிவு இப்போது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. 

அடுத்த வாரம் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset